உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடு ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
109 பார்வைகள்

மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தினால் ’16 நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாடு’ (16 Days of Activism) எனும் விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்றைய தினம் புதன்கிழமை(25) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேருந்துகளில் மதுபோதையில் பயணிப்பவர்களாலும், சில பயணிகளின் அநாகரிகமான நடத்தைகளாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், அசௌகரியங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள், தனியார் மற்றும் அரசு போக்குவரத்துச் சேவைகளின் சாரதிகள், நடத்துனர்கள் (Conductor) உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குறிப்பாக, பேருந்து பயணங்களின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் அநாகரீகமான செயற்பாடுகள் இடம்பெறுவதை தடுப்பதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பான பயண உரிமையை உறுதிப்படுத்துவதும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன இயக்குனர் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

90 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

56 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

77 0 0
இலங்கை செய்திகள்

ஆட்டுப்பண்ணைக்கு தீ வைப்பு; ஆடுகள் உ**யிரிழப்பு.!

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், பண்ணை முற்றாக…

120 0 0