தானாகவே திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன.
தற்போது தீவிரமடைந்துள்ள இடைப் பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாளை வங்காள விரிகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி வலுவடையும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதன் காரணமாக, நாளை காலை 6 மணி வரை கடுகண்ணாவ பகுதியூடான வீதி மூடப்படும் என கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


