ஹட்டனில் ஒரே இரவில் பல கடைகளில் கைவரிசை!
ஹட்டன் சைட் வீதியில் பல வியாபார நிலையங்களில் ஒரே இரவில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று 24 ம் திகதி இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவங்களில் பல்வேறு பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தச் சம்பவங்களில் ஒருவர் அல்லது குழுவொன்று ஈடுபட்டுள்ளதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, சந்தேக நபர் ஒருவரின் முகம் வியாபார நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் சைட் வீதியில் ஒரே இரவில் பல வியாபார நிலையங்களில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவங்கள் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இச் சம்பவம் குறித்து ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர அவர்களின் பணிப்புரைகமைய ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தடையவியல் அடையாளங்களை சேகரித்துள்ளதுடன் அப் பகுதியில் பொருத்தபட்டுள்ள அனைத்து சீ.சீ டிவி கேமராக்களில் பதிவாகியுள்ள அனைத்து கட்சிகளும் பார்வை இட்டு சந்தேக நபரை அடையாளம் காணும் நோக்கில் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.


