உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போரைத் தொடங்கினால் நரகத்தைப் பார்ப்பீர்கள் : ட்ரம்பிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

உலக செய்திகள் 17 மணி நேரம் முன்
89 பார்வைகள்

அமெரிக்கா நினைத்தால் ஒரே மணி நேரத்தில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு, “போரைத் தொடங்கினால் நரகத்தை பார்ப்பீர்கள்” என ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கடல்வழி வர்த்தகத்தில் கடும் இடையூறுகள் ஏற்பட்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கா தனது இராணுவப் படைகளை நிலைநிறுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், “ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டுமானால், அந்நாடு தனது அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும். தேவைப்பட்டால் தாக்குதல்களைத் தொடரத் தயாராக உள்ளோம். ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 வானூர்தி-தாங்கி கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஈரானில் உள்ள 38 முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறோம். ஒரே மணி நேரத்தில் ஈரானை முழுமையாக அழித்துவிட முடியும்” என எச்சரித்தார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்குப் பதிலளித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “நீங்கள் போரைத் தொடங்குங்கள்; அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாகப் பொழிவார்கள். அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குக் முன்னால் நாங்கள் மெத்தனமாக இருக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

அதேவேளை, அமெரிக்கா ஏதேனும் தவறு செய்தால் ஈரானின் பதிலடி பேரழிவாகவும் கடுமையாகவும் இருக்கும் என ஐ.ஆர்.ஜி.சி. (IRGC) பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரான் போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துள்ளது: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான போர் “இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது” என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம்,…

89 0 0
உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் போருக்கு மத்தியிலும் குலுக்கல் முறையில் கூட்டுத் திருமணம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் – யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வேலையின்மை,…

13 0 0
உலக செய்திகள்

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு!

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட்டிடம் (Gadi Eisenkot) ஒப்படைக்கவுள்ளதாக…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது ஜனாதிபதி பதவிக்கால அனுபவங்களை உள்ளடக்கிய “Promise Me, America” என்ற நினைவுக் குறிப்புகள்…

99 0 0