உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரான் போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துள்ளது: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

உலக செய்திகள் 15 மணி நேரம் முன்
89 பார்வைகள்

ஈரானுக்கு எதிரான போர் “இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது” என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஈரானிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய தொடர் தாக்குதலை தற்போதைக்கு மீண்டும் தொடங்குவதற்குத் தாம் ஆயத்தமாக இல்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.

கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தியாளர் சந்திப்பு அறைக்கு எதிர்பாராதவிதமாக வருகை தந்த ஜனாதிபதி ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.

“ஈரான் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது. நாம் தற்போதுள்ள நிலையையே பராமரித்து வருகிறோம்,” என்று கூறிய ட்ரம்ப், ஈரானின் தலைமைத்துவம் வீழ்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், அந்த நாட்டின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாகச் முடக்குவதற்கான நீண்டகால தீர்வை உறுதி செய்ய இன்னமும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும்பான்மையையும் ஜனநாயகக் கட்சியிடம் இழந்த நிலையைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போரினால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டமை, தேர்தலில் மக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

முன்னதாக, மத்திய கிழக்கு நட்பு நாடுகளான கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் தற்போதைய அமைதி நிலையையே விரும்புவதாக எக்ஸ் (X) தளத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுடன் “சாதகமான நகர்வுகள்” காணப்படுவதாகவும், போர் முடிவுக்கு வர “நல்ல வாய்ப்பு” உள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் திங்கள்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், போரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ட்ரம்பே தீர்மானிப்பார் எனக் கூறினார்.

அதேநேரம், பாராளுமன்றத்தின் முறையான அனுமதியின்றி ஈரானுடன் போரில் ஈடுபட்டதன் மூலம் போர் அதிகாரச் சட்டத்தை (War Powers Resolution) மீறியதாகக் கூறி, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்திற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தநிலையில், ஈரானுடன் வலுவான ஒப்பந்தம் எட்டப்படும் பட்சத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தை முறியும் பட்சத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஈரானின் 38 பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் போருக்கு மத்தியிலும் குலுக்கல் முறையில் கூட்டுத் திருமணம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் – யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வேலையின்மை,…

13 0 0
உலக செய்திகள்

போரைத் தொடங்கினால் நரகத்தைப் பார்ப்பீர்கள் : ட்ரம்பிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்கா நினைத்தால் ஒரே மணி நேரத்தில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு, “போரைத் தொடங்கினால் நரகத்தை பார்ப்பீர்கள்”…

88 0 0
உலக செய்திகள்

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு!

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட்டிடம் (Gadi Eisenkot) ஒப்படைக்கவுள்ளதாக…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது ஜனாதிபதி பதவிக்கால அனுபவங்களை உள்ளடக்கிய “Promise Me, America” என்ற நினைவுக் குறிப்புகள்…

99 0 0