உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
78 பார்வைகள்

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் நாளை (11) முடிவடையவிருந்ததாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், பிரதேச செயலகங்கள் ஊடாகப் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நிலைமையைக் கருத்திற் கொண்டு, அதனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அதேவேளை, நாளைய தினத்திற்கு பிறகு ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகளைக் கோருவது இணையவழி (Online) முறைமை மூலமாக மட்டுமே நடைபெறும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இணையவழி முறைமையின் ஊடாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுவரை அஸ்வெசும நன்மைகளுக்காக விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து 105,233 மேல்முறையீடுகள் பதிவாகியுள்ளதாகவும், ஒரு விண்ணப்பதாரர் மற்றொரு விண்ணப்பதாரருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள ஆட்சேபனைகளின் எண்ணிக்கை 1,220 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையவழியில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு நவம்பர் 11 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது.

ஆனால் பிரதேச செயலக மட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகள், ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் நிலைமைக்கு அமைவாக இந்தக் காலம் நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நவம்பர் 11 முதல் 15 ஆம் திகதி வரை இணையவழி (Online) முறைமையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும். இன்று வரை விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடுகளின் எண்ணிக்கை 105,233 ஆகும்.

ஒரு விண்ணப்பதாரர் மற்றொரு விண்ணப்பதாரருக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள ஆட்சேபனைகளின் எண்ணிக்கை 1,220 ஆகும்.

பிரதேச செயலாளரினால் விண்ணப்பதாரர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேபனைகளின் எண்ணிக்கை 173, பொதுமக்களின் ஆட்சேபனைகள் 5,426 பதிவாகியுள்ளன.

இது தவிர, பிரதேச செயலகங்கள் மூலம் அமைப்புக்குள் (System) உள்ளீடு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,981 ஆகும். இது தொடர்பான மேலதிக சிக்கல்கள் ஏதேனும் இருப்பின் 1924 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

75 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

78 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

93 0 0
இலங்கை செய்திகள்

கோட்டை – மருதானை இடையே தொடருந்து சமிக்ஞை அமைப்பில் கோளாறு

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் (Signal system) கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட ரயில் நிலையங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கும்…

91 0 0