உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
69 பார்வைகள்

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு இன்று (4) புதன் கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகம் (National Productivity Secretariat), தூய்மையான இலங்கை செயலகம் (Clean Sri Lanka Secretariat) மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை இடம்பெற்றது.

பொதுத்துறையின் டிஜிட்டல் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை அரச அலுவலகங்களின் அன்றாடப் பணிகளில் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக அரச சேவைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

குறித்த நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொதுத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்து, நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக அரச சேவைகளை மேலும் வினைத் திறனுடனும் பயன் உறுதியுடனும் முன்னெடுப்பதற்கான முக்கியத்துவத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பல்வேறு பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

மனிதவளத்தைப் பயன்படுத்தி நேரடியாக அரச சேவைகள் வழங்கப்பட்ட காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட மனிதநேய அணுகுமுறையும் சேவைகளை விரைந்து வழங்கும் பண்பும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கணினிமயமான சேவைகள் நடைமுறைக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசனத்துறை கப்பல் சேவை: நவம்பர் மாதத்திற்கான சிறப்பு கட்டணக் குறைப்பு மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் (NGP) மற்றும் காங்கேசனத்துறை (KKS) இடையே இயக்கப்படும் ‘சுபம் ஃபெர்ரி’ (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர்…

83 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அநுர அரசுக்குச் சிறந்த பாடம் : சஜித் எச்சரிக்கை!

“தேசிய மக்கள் சக்தி அரசின் உறுப்பினர்களே, அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள். மக்கள் நலன்புரித் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டதாலும் விலைவாசி உயர்வாலும் அங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதைப்…

75 0 0
இலங்கை செய்திகள்

முறிகண்டியில் இராணுவக் குடியிருப்புக்களுக்காக அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன – சபையில் பகிரங்கப்படுத்திய ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர்பிரிவில், முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரேயுள்ள அடர்வனப்பகுதியில் இராணுவக் குடியிருப்புகளுக்களை ஏற்படுத்துவதற்காக பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கப்படுத்திய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா…

62 0 0