உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
2 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தீவிரமடையும் முரசு சூறாவளி; வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடற்பகுதியில் உருவெடுத்துள்ள ‘முரசு’ சூறாவளி நிலைமை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் தொழில்புரியும் சிறிய படகு மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய வானிலை அறிக்கையின்படி, மத்தியமேற்கு வங்கக்கடற்பகுதியில் ‘முரசு’ எனும் சூறாவளி நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாகக் குறித்த கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் அலைகள் கொந்தளிப்பாகவும் மிகவும் சீற்றமாகவும் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் தொழில்புரியும் சிறிய படகு மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே இப்பகுதிகளில் கடலுக்குச் சென்றுள்ள சிறிய படகுகள், நிலவும் பலத்த காற்று காரணமாக பாதுகாப்பாகத் தொழிலில் ஈடுபட முடியாத அபாய நிலை உருவெடுத்துள்ளதால், உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கியோ அல்லது கரைக்கோ திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏனைய பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களும் தங்கள் பகுதிகளில் நிலவும் காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகளின் நிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

மேலும், கடலுக்குச் செல்லும்போதும், தொழிலில் ஈடுபடும்போதும் மற்றும் திரும்பும்போதும் உயிர்காப்பு அங்கிகளை கட்டாயம் அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தால் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு மீனவச் சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித் களத்தில் இறங்கி வேலை செய்யும் ஒரே தலைவர் – ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும்…

70 0 0
இலங்கை செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியைத் தற்போதைய அரசும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு…

71 0 0
இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை ஏற்றம்; கூடுதல் சுமை என மக்கள் கவலை.!

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில்…

66 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலையில் குருதிக்கொடை முகாம்

திருகோணமலை மெதடிஸ்த திரு அவையின் திருகோணமலை சேகர வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இரத்ததான முகாம், டொக்யாட் மெதடிஸ்த ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் குருதிக்கொடை…

76 0 0