உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
1 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆட்சியைத் தக்கவைக்கவே அடக்குமுறைச் சட்டங்கள்! – சஜித் சாடல்

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
81 பார்வைகள்

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைந்துள்ள அரசு, தனது இயலாமையை மறைத்து ஆட்சியை வலுக்கட்டாயமாகத் தக்கவைத்துக்கொள்ள அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் தயாராகி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

பொலன்னறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

“தற்போதைய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மக்களின் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்துத் தெரிவிக்கும் ஜனநாயகச் சுதந்திரம் என்பவற்றைக் கட்டுப்படுத்த அரசு இரு புதிய சட்டங்களைக் கொண்டுவர முற்படுகின்றது.

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டம்’ என்ற போர்வையில், நிறைவேற்று அதிகாரத்துக்குப் பாரிய அதிகாரங்களை வழங்கி, கோபத்தில் இருக்கும் மக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.” – என்றார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் துயரங்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளது. துறைமுக இறக்குமதி விலையில் எரிபொருள் தருவதாகவும், மின்சாரக் கட்டணத்தைக் கணிசமாகக் குறைப்பதாகவும் கூறிய நிலையில், இன்று பல மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகத் தொடங்கியுள்ளன.

ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் நிலையில், அரசு 120 ரூபாவையே கொள்முதல் விலையாக நிர்ணயித்துள்ளதால் விவசாயிகள் ஒரு கிலோவுக்கு 17 ரூபா வீதம் கடுமையான நட்டத்தைச் சந்திக்கின்றனர். பாண் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.” – என்றார்.

சமய விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

“காவி உடை தொடர்பான அண்மைய விவகாரத்தில் அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தூரநோக்கின்றிச் செயற்பட்டு பௌத்த மதத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அரசமைப்பின் மூலம் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையைப் பாதுகாப்பதுடன், ஏனைய மதங்களுக்கும் உரிய அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் அரசு உறுதியாக வழங்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்து வைப்பு!

வவுனியா மாவட்டம், பிரமனாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55ஆவது கிலோமீற்றரில் அமைந்துள்ள பெரியதம்பனைப் பகுதியில், 40.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆற்றுச்சருக்கை, கொங்கிறீட் வீதி மற்றும் மதகுகளை வடக்கு…

90 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற வேலணை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், கல்லூரி தினமும்!

வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரித்தினமும் பரிசளிப்பு விழாவும் இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. கல்லூரியின் சேர். வைத்திலிங்கம் துரைச்சுவாமி மண்டபத்தில், கல்லூரி முதல்வர்…

80 0 0
இலங்கை செய்திகள்

தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காக கடும் காய்ச்சலுடன் மீன்பிடிக்கச் சென்ற மகனை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!!

தீபாவளிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பட்டாசு மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்காக கடும் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் மீன்பிடிக்கச் சென்ற தனது மகனை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து…

68 0 0
இலங்கை செய்திகள்

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர் கால்வாயில் இருந்து சட@லமாக மீட்பு!

பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே…

71 0 0