காதல் விவகாரம்; இளைஞன் கொ**லை.!
காலி, இக்கடுவைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை புகுந்த இனந்தெரியாத நபர்கள், இளைஞன் ஒருவரை வாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இக்கடுவைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை உந்துருளியில் வந்த இருவர், மேற்படி இளைஞரின் வீட்டுக்குள் நுழைந்து அவர் மீது வாளால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதை அடுத்து, தாக்குதலை நடத்திய நபர்கள் அங்கிருந்து உந்துருளியில் தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடே இந்தப் படுகொலைக்குப் பிரதான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.


