உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
31 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வியட்நாம் நாட்டின் தலைவரைப் போல் மஹிந்தவும் போற்றப்பட வேண்டியவர்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
86 பார்வைகள்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வயோதிப நிலையையடைந்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால் அவர் இந்த நாட்டிற்காகச் செய்த சேவைகள் என்றும் வயோதிபமடையாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பங்களிப்புகள் குறித்து இவ்வாறான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தாய்நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உண்மையை எமது நாட்டின் மக்கள் விரைவில் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

வியட்நாம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த புரட்சித் தலைவரை அந்த நாட்டு மக்கள் இன்றளவிலும் மிகவும் உயர்வாக மதித்துப் போற்றுகின்றனர். அவரது உடலம் இன்றும் பாதுகாக்கப்பட்டு உரிய மரியாதைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், இலங்கையில் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த சில இளைஞர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தியாகங்களைப் புரிந்துகொள்ளாமல், அவரை ‘கிழட்டு மைனா’ என விமர்சித்துப் பேசி வந்தனர்.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவை அவ்வாறு தவறாக விமர்சித்தவர்கள், தங்களது நிலைப்பாட்டில் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டோம் என்பதை இன்று படிப்படியாக உணரத் தொடங்கியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கண்ட பின்னர், தாங்கள் செய்த தவறை உணர்ந்து எம்மிடம் நேரடியாகவே வந்து பேசி வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் மைல்கல் பகுதியில் சட்டவிரோத மதுபானத்தைக் கார் ஒன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால்…

65 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.!

இன ரீதியாக மொழி ரீதியாக நாங்கள் பிரிந்து நின்றது போதும். நாங்கள் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற தொனிக்குள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட…

72 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நேர்ந்ததே அநுர அரசுக்கும் நடக்கும்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று…

69 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய மூவர் சிக்கினர்.!

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பீல்ல பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிபிலை, தெல்கொட மற்றும்…

90 0 0