உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நிர்வாகச் செயற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
87 பார்வைகள்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதுடன், பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

மாகாணத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்புதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வுகளைத் துரிதப்படுத்துதல், வருடாந்த இடமாற்றங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

அலுவலகக் கடிதங்களுக்குக் குறித்த காலத்தில் பதிலளித்தல், ஒழுக்காற்று விசாரணைகளையும் கணக்காய்வுக் கேள்விகளையும் உரிய காலத்தில் நிறைவு செய்தல், வரவு – செலவுத் திட்டங்களை முறையாக முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், அலுவலகங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், அரச நிகழ்வுகளை உரிய நடைமுறைகளுக்கு அமைவாக நடத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தவறாது பங்கேற்றல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துமாறு தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யோஷிதவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு.!

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ராகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொடிவீகும்புர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ராகமை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு-15 பகுதியைச்…

75 0 0
இலங்கை செய்திகள்

போலியான பேயைக் காட்டி பீதியைக் கிளப்பும் எதிர்க்கட்சிகள்.!

அரசால் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ எந்தவொரு வகையிலும் அடக்குமுறைக்காகக் கொண்டுவரப்படவில்லை எனவும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவே எதிர்க்கட்சியினர் இது குறித்துப் போலியான அச்சத்தைப்…

70 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மகன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்.!

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி. விக்னேஸ்வரனின் புதல்வரான நிர்மலகுகன் விக்னேஸ்வரன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். நிர்மலகுகன் விக்னேஸ்வரன் எதிர்வரும் 2 ஆம் திகதி…

67 0 0