துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!
கொழும்பு, ஒருகொடவத்தை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கிருலப்பனைப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


