மாணவன் ஒருவர் உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹொரண பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவர் ஒருவரின் சடலம் மொரட்டுவ மாதங்காவத்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
ஹொரண பிரதேசத்தின் பிரபல பாடசாலையான்றில் பயின்ற, மியுரு நிம்சர என்ற 16 வயதான மாணவரே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 25ஆம் திகதி ஹோரண பிரதேசத்தில் கருத்தரங்கொன்றில் பங்கேற்பதற்காக செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடற்கரையில் சடலமொன்று கிடப்பதாக 119 என்ற பொாலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவனின் மரணம் தொடர்பிலோ அல்லது மரணத்திற்கான காரணம் தொடர்பிலோ இதுவரையில் பொலிஸார் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.


