உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
27 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘அர்னாப்’ புயல் இன்று மேலும் வலுவடையும்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
80 பார்வைகள்

வங்காள விரிகுடாவில் உருவான ‘அர்னாப்’ சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்து வருவதால் இலங்கையைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் கரையை அண்டிய பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையத்தால் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து வடகிழக்கே சுமார் 1,050 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்தச் சூறாவளி, மேலும் தீவிரமடைந்து இன்று தீவிர புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர், இது நாளை முற்பகல் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரைப்பகுதியைக் கடந்து செல்லும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

குறிப்பிட்ட அபாயகரமான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடுவதுடன், பலத்த இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடற்பகுதிகளில் அலைகள் 3.0 முதல் 4.0 மீற்றர் வரை உயரக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

வட அகலாங்கு 10ஏ – 20ஏ மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80ஏ – 95ஏ இற்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினர், மறு அறிவித்தல் வரை அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் முற்றாகத் தவிர்த்து, உடனடியாகப் பாதுகாப்பான இடங்களைச் சென்றடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பு முதல் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில், மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையை அண்டிய கடற்பகுதிகளில் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் வீசும் காற்றின் வேகம் தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்…

69 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை…

78 0 0
இலங்கை செய்திகள்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான…

79 0 0
இலங்கை செய்திகள்

திடீரென உ**யிரிழந்த பல்கலைக்கழக மாணவி.!

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திடீரென உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ககுலி…

71 0 0