உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீதி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
71 பார்வைகள்

கொழும்பு, ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பனை – மொரகஹஹேன வீதியின் மாயா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குத் திரும்ப முற்பட்ட முச்சக்கரவண்டி, பிரதான வீதியில் வேகமாகப் பயணித்த வேன் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக ஹோமாகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவராவார்.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாகொட துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் கைது.!

களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (9) முற்பகல் உணவகமொன்றின் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர்…

92 0 0
இலங்கை செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை…

87 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்; சந்தேகநபரின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதெனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள்…

78 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குஸன் வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

77 0 0