முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு.!
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளான இன்றைய தினம், ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2 ஆம் லெப்டினன்ட் மாலதியின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது .
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இரணைமடுவில் நடைபெற்றது.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.






