உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
11 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘ஜெயிலர் 2’ திரைப்படம் இணையத்தில் கசிவு?

சினிமா 2 நாட்கள் முன்
100 பார்வைகள்

ஜெயிலர் 2’ திரைப்படம் இணையத்தில் கசிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை படக்குழு மறுத்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்துவிட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

எனினும், இந்த தகவல் உண்மையல்ல என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

திரைப்படம் இணையத்தில் கசிந்ததாக வெளியான தகவல் தங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்ததாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், திரைப்படம் தொடர்பாக சிலர் வேண்டுமென்றே எதிர்மறையான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘இந்தியன் 3’ தொடர்பில் மாஸ் அப்டேட் வெளியானது!

இயக்குநர் சங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2024-ஆம் ஆண்டு…

55 0 0
சினிமா

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார். கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில்…

81 0 0
சினிமா

‘அன்பில் அவன்’ படத்தில் நடித்தது வரம் : ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

77 0 0
சினிமா

எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போல் உதவி செய்ய ஆசை!

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அப்போது அவர் பேசுகையில், “நான் மக்களால் உருவாக்கப்பட்டவன்.…

77 0 0