உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

விளையாட்டுச் செய்திகள் 16 மணி நேரம் முன்
66 பார்வைகள்

இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் ஆடவர் அணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அறிவித்துள்ளது.

அண்மையில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய வலது கை தொடக்க ஆட்டக்காரரான சாஹிப்சாதா ஃபர்ஹான், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்துவார்.

அதேவேளையில், இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் ஷா அஃப்ரிடி முத்தரப்புத் தொடருக்கான ஒருநாள் அணிக்குத் தொடர்ந்து தலைவராக செயல்படுவார்.

இந்த டி20 சர்வதேசத் தொடர் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இதன் முதல் போட்டி ஒக்டோபர் 9-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகள் முறையே ஒக்டோபர் 11 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறும்.

டி20 சர்வதேசத் தொடரைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுடன் இணைந்து ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் முத்தரப்புத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கவுள்ளது.

இத்தொடரின் முதல் மூன்று போட்டிகள் ராவல்பிண்டியிலும், எஞ்சிய லீக் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை லாகூரிலும் நடைபெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஈட்டி எறிதலில் எனக்கு இவர்தான் குரு : ருமேஷ் பத்திரகே நெகிழ்ச்சி!

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகின் முதன்மை நிலை வீரரான இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே , ஜெர்மனியின் ஒலிம்பிக் சாம்பியனான தோமஸ் ரோலரை (ஈட்டி எறிதலில் எனக்கு…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

83 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

86 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

94 0 0