உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

22 குறித்த உயர் நீதிமன்றத்தின் இரகசியத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு முன்கூட்டியே எவ்வாறு தெரியும்?

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
48 பார்வைகள்

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் இரகசியத் தீர்ப்பு இன்னும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கப்படாத நிலையில், ஜனாதிபதிக்கு அந்தத் தீர்ப்பு முன்கூட்டியே எவ்வாறு தெரியும்?” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“22 ஆவது திருத்தத்துடன் நீதிமன்றச் சட்டத்தையும் ஒன்றாக இணைத்து வாசிக்க வேண்டும். உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரப்படும் இந்தத் திருத்தங்கள், நீதித்துறையின் சுயாதீனத்துக்கு மரண அடியைக் கொடுப்பதாக அமைந்துள்ளன.

இந்தத் திருத்தம் மக்கள் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாகில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும். ஆனால், இதனை நாடாளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி முன்கூட்டியே பிரஸ்தாபித்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் அவருக்கு இந்த இரகசியத் தீர்ப்பு எவ்வாறு தெரியும்?

நாட்டின் ஜனநாயகம் தற்போது பெலவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை அர்த்தமற்ற முறையில் காலம் தாழ்த்தி வரும் அரசு, நாட்டில் தனிக் கட்சிக் ஆட்சியை உருவாக்கும் முறையை ஸ்தாபிக்க முற்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைப்பதும் ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்குவதாகும். எனவே, உயர்நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெறும் அமைதிவழியிலான ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு முற்போக்குத் தரப்புகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான…

41 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச…

32 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின்…

9 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய…

44 0 0