உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆம்பர் கிரீஸ் தொகையுடன் சந்தேக நபர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 16 மணி நேரம் முன்
34 பார்வைகள்

மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(11) கடற்படையின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாவர, விலங்கின பாதுகாப்பு சட்ட பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 67 கிலோ எடையுடைய திமிங்கிலத்தின் ஆம்பர் கிரீஸ் (Ambergris) கைப்பற்றப்பட்ட நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தால் மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு கடத்தப்படவிருந்த 67 கிலோ கிராமிற்கும் அதிகமான திமிங்கிலத்தின் ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் ஆம்பர் கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

45 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது கவிழ்ந்த பாரவூர்தி.!

பதுளை – மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தை அவரது மகன் மற்றும்…

38 0 0