உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் கைது தற்காலிகமானது; எனது மக்களுக்காக யாருடனும் இணைந்து அரசியல் செய்வேன்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
137 பார்வைகள்

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையால் தமிழ் மக்கள் அடைந்துள்ள உற்சாகம் தற்காலிகமானது எனவும், நாளை 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மேடையில் தான் ஏறவுள்ளார் எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமைக்காகத் தமிழ் மக்கள் தற்போது உற்சாகமாக இருக்கின்றனர். ஆனால், அவர் 14 நாட்களில் வெளியில் வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த வழக்கு முடிவடையும் போது வேறு யாரோ ஜனாதிபதியாக இருப்பார். எனவே, இத்தகைய தற்காலிக உற்சாகத்தை வைத்துக் கொண்டு எங்களால் அரசியல் செய்ய முடியாது.

‘இனப்படுகொலையாளி’ எனக் கூறப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் அனுராதபுரம் அரசியல் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளப் போவதாகப் பலரும் பல கதைகளைக் கூறுகின்றனர். வடக்கில் இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு எனக்கு அவர்களின் மேடையில் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே, எதிர்வரும் 12ஆம் திகதி (நாளை) மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கூட்ட மேடையில் நான் ஏறுவேன்.

வடக்கு மாகாணத்தில் முறையான தலைமை இல்லாமல் வாழும் சமூகம் தன்னை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால், யாருடன் வேண்டுமானாலும் ஒன்றிணைந்து அரசியல் செய்யலாம். அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தமிழ் மக்களுக்கு எதையாவது செய்யும் என்று நம்பினால் அது முட்டாள்தனமானது.

சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகளுடன் பேசவும், சிலரை எதிர்க்கவும் வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம்.

எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் அழைப்பு விடுத்தாலும் அவர்களுடன் செல்வேன். இதுவே அரசியலாகும். எதிர்க்கட்சியில் இருக்கும் எவருக்கும் நான் ஒத்துழைப்பு வழங்குவேன். நாமலை நான் அவ்வாறே பார்க்கின்றேன். எனது மக்களுக்காகவே நான் ஒவ்வொரு மேடையிலும் ஏறுகின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுர அரசுக்கு ஆதரவாக மாத்தறையிலும் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

76 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

88 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவா இலங்கை அரசின் கைக்கூலி –  காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்!

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என…

77 0 0