உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு விஜயம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
147 பார்வைகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று வியாழக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா – சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஆலயத்துக்கு வருகை தந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்த வரவேற்பு நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மஞ்சுல சுரவீர ஆராச்சி, நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் வேலு யோகராஜ் உள்ளிட்ட ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் அனுமான் பாதத்தை தரிசித்ததுடன், புனித கங்கையில் இறங்கி கங்கா தரிசனமும் செய்தார். இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிர்வாக சபை உறுப்பினர்களுடன் அவர் குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

மேலும், இந்திய அரசின் உதவியுடன் இராகலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளின் பயனாளிகள், அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, இந்திய அரசுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

அவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர்களுக்கான அஞ்சலியுடன் ஆரம்பமான பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் காலை 10:00 மணியளவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டு ஆரம்பமானது. இதில் முதலாவதாக சென்ற கூட்ட…

68 0 0
இலங்கை செய்திகள்

செம்மணியின் 4 ஆவது இடைக்கால அறிக்கை உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல்!!

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில்…

85 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவா இலங்கை அரசின் கைக்கூலி –  காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி விசனம்!

செம்மணி மனித புதைகுழியின் தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவா தமிழின படுகொலைகளை மூடி மறைக்கும் இலங்கை அரசின் கைக்கூலியாக செயல்பட்டமை அவரது இடைக்கால அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என…

74 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் நிதி மோசடி வழக்கு:நாமல் எம்.பிக்குமறியல் நீடிப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்…

62 0 0