உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
24 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பூத களுவா’ வெட்டிக் கொ*லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
136 பார்வைகள்

கொழும்பு, தெஹிவளைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கொஸ் மல்லி’ என்பவரின் மைத்துனரான ‘பூத களுவா’ என அழைக்கப்படும் நபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை, ஓபன் வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர், பாதாள உலகக் கும்பல் தலைவனான ‘கொஸ் மல்லி’ என்பவருடன் பல ஆண்டுகள் டுபாயில் தங்கியிருந்தவர் என்பதுடன், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சில வாரங்களுக்கு முன்பே இலங்கை திரும்பியுள்ளார்.

நேற்று முச்சக்கரவண்டியில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலையானது மற்றொரு பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் தரப்பினரால் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குத்துச் சண்டைப் போட்டி; வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட குத்துச் சண்டைப் போட்டியில் வேலாயுதம் மகா வித்தியாலயம், நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது. மாவட்டங்களுக்கிடையில் மாகாண ரீதியாக பொலன்னறுவையில் நடாத்தப்பட்ட…

72 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த மகா சங்கத்தை அவமதிக்கும் ஜனாதிபதி; மஹிந்தவை இலக்கு வைத்து அரசியல் பழிவாங்கல்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசானது பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்துடன் முரண்பாடான போக்கைக் கொண்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்தே தனது அனைத்துச்…

67 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தை எவர் மீறினாலும் தண்டனை உறுதி.!

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அரசு எவ்வித விட்டுக்கொடுப்புகளையும் செய்யாது என்றும், சட்டத்தை எவர் மீறினாலும் அவர்களுக்கான தண்டனை நிச்சயமாக உறுதி செய்யப்படும் என்றும் நீதி மற்றும்…

70 0 0
இலங்கை செய்திகள்

வைத்தியசாலை மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

சடலத்தை உரிய முறையில் பாதுகாக்காமல், அடிப்படை வசதிகளற்ற இடத்தில் வைத்திருந்ததாக அச்சுவேலி வைத்தியசாலை நிர்வாகம் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த…

77 0 0