உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
91 பார்வைகள்

புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஹகந்த வனப்பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, குறித்த கஞ்சா தோட்டத்தில் பல்வேறு உயரங்களில் செழிப்பாக வளர்க்கப்பட்டிருந்த ஏராளமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து கஞ்சா செடிகளும் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தபோது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0