உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

அரசின் அடக்குமுறைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் வலுவான எதிர்க்கட்சி இயங்க முடியாத சூழல்.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
55 பார்வைகள்

இன்றைய தினம் (01) கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகள், வழக்குகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே நாட்டில் வலுவான எதிர்க்கட்சியொன்று இயங்க முடியாத சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டினார்.

அரசியல்வாதிகளுக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருப்பதால், அவர்கள் பயத்தில் வெளியே வர முடியாத நிலை காணப்படுவதாகவும், இருப்பினும் அரசாங்கத்தின் இந்த அழுத்தங்களுக்கு உள்ளாகும் பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் மிக விரைவில் ஒன்றுதிரண்டு போராட்டங்களில் ஈடுபடுவர் என்றும் அவர் எச்சரித்தார்.

1951-ல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது பெருமைமிக்க 75ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், 2026 செப்டம்பர் 2ஆம் திகதி கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெறவுள்ளது.

கடந்த 76 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் நடக்கவில்லை எனத் தற்போதைய அரசு கூறுவது முற்றிலும் தவறானது என்றும், சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கங்கள் எட்டிய வரலாற்றுச் சாதனைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை இந்த மாநாட்டின் மூலம் மக்களிடம் வெளிப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் பெருமையுடன் பேசும் கனிம எண்ணெய் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் மொரட்டுவையிலிருந்து போர்ட் சிட்டி வரையிலான அதிவேகப் போக்குவரத்துப் பாதை திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் இறுதிப் கட்டங்களே தவிர, இந்த அரசாங்கத்தால் புதிதாகக் கொண்டுவரப்பட்டவை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள் குறித்து எச்சரித்த அவர், இது ஒரு சர்வாதிகார நிர்வாகத்திற்குத் தேவையான சூழலை உருவாக்கவே செய்யப்படுவதாகவும், இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாது ஊடகங்கள், விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நிதி அமைச்சு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகள் குறித்துப் பேசும் ஆட்சியாளர்கள், முதலில் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்க வேண்டும் என்றார்.

அத்துடன், முன்னாள் எல்.டி.டி.ஈ நிதிப் பொறுப்பாளர் கே.பி. (குமரன் பத்மநாதன்) வசம் கப்பல்களும் பெருமளவு பணமும் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் எவ்வாறு சுதந்திரமாக நடமாடுகிறார் என்பது குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் 76 ஆண்டுகாலக் கடன்களை விடவும், ஜே.வி.பி நடத்திய ஆயுதக் கலவரங்களால் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களே அதிகம் என்றும், நாட்டிற்கு அவர்கள் இழைத்த வரலாற்று அழிவுகள் குறித்த உண்மைகளை சுதந்திரக் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்றும் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

1 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

16 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

47 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0