உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய மோட்டார் சைக்கிள்கள்.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
65 பார்வைகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் (Helmet) அணியாமல் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் நேற்று (31) இத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது.

மேலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, பிரதான வீதிகளில் தலைக்கவசம் அணியாமல் அபாயகரமாக வாகனங்களைச் செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாத சாரதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தட்டச்சு முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

131 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0