உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

யாழ். சுன்னாகத்தில் அனுமதியின்றி பௌத்த மத்திய நிலையம் அமைப்பு – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
68 பார்வைகள்

யாழ். வலிகாமம் தெற்கு, சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் ஒன்று அடாத்தாக அமைக்கப்பட்டு வருகின்றது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுமார் 4 பரப்பு விஸ்தீரணம் கொண்ட கந்தரோடை விகாரைக் காணியில், இந்தப் பௌத்த மத்திய நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இடம்பெற்றன.

அந்தக் காலத்தில் பிரதேச சபையின் அனுமதியின்றி எழும்பிய கட்டடத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டதை அடுத்து, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது வெளிப்படையாகத் தெரியாதவாறு உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு, பௌத்த மத்திய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சாதாரண மக்களின் அனுமதியற்ற கட்டுமானங்களை நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள், இந்தத் தியான மண்டபம் உரிய அனுமதியின்றி அமைக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்தக் கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டு வருவதால், வடக்கு மாகாண ஆளுநர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பிரதேச சபைத் தலைவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், சபை உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், முறையான அனுமதிகளைப் பெறாமல் தொடரும் இந்தக் கட்டுமானம் தொடர்பில் சபையில் பேசப்பட்டுள்ளதுடன், உள்ளூராட்சி சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு உரிய நடைமுறைகளைப் பின்பற்றிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறினால் நீதிமன்றத்தை நாடத் தற்போதைய சபை தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…

40 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோல் விலைகள் குறைப்பு.!

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்…

48 1 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் போ*தைப் பாவனையில் மாணவர்கள்; விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை.!

மது பாவிப்பவர்களை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் பாவனை மிகவும் அதிகமாகவும், அந்த குடும்ப நிலை மிகவும் சீரழிந்ததாகவும் இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.…

34 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் தீப்பரவல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் எரிந்துள்ளதுடன் பனை மரங்கள் சில தென்னை…

66 0 0