உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தொழிற்சங்க போராட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்.!

இலங்கை செய்திகள் 18 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று திங்கட்கிழமை (24) முதல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அனுப்பிய கடிதத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியா நடவடிக்கை எடுத்ததாகவும், அதனுடன் தொடர்புபட்டே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனையடுத்து, இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திற்கு அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை சமர்ப்பிப்பதை இடைநிறுத்தவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தரவு முறைமையை மீளமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் எனவும், தொழிற்சங்க நடவடிக்கை காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்படாத தரவுகள் பின்னர் முறைமையில் மீளப் பதிவேற்றப்படமாட்டாது எனவும் சங்கம் எச்சரித்துள்ளது.

பி.எச். மிகஸ்தெனியவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்றும், முன்னதாக அமைச்சுக்கு அனுப்பிய கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சங்கம் கோரியுள்ளது.

அத்துடன், கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் பணியாளர் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் கூறி, அதற்கும் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நியாயமான விசாரணைக்கு ஒத்துழைக்கவும், குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் தாம் தயாராக இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்.!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன்…

80 0 0
இலங்கை செய்திகள்

பெக்கோ சமனின் தாய் சுட்டுக் கொ*லை; மற்றுமொரு சந்தேகநபர் கைது.!

திட்டமிட்ட குற்றவாளியான ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில்…

50 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசு சிறந்த வழியில் பயணிக்கின்றது; ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்.!

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும் ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின்…

66 0 0
இலங்கை செய்திகள்

ரயில் மோதி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழப்பு.!

கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர்…

70 0 0