சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வீதியோரமாக நடந்து சென்ற இரத்னபுரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார்.
பேருந்து அவர் மீது கவிழ்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பேருந்தில் பயணித்த சாரதி மற்றும் பெண் ஒருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

