உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
78 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையுடன், இரண்டு டிங்கி படகுகளும், லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு, வெல்ல வீதிய கடற்கரைப் பகுதியில் இன்று (23) காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த டிங்கி படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, லொறி மூலம் கொண்டு செல்வதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 2,276 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகை, டிங்கி படகுகள் மற்றும் லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு தெல்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

72 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

75 0 0