உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கோர விபத்தில் சிக்கி சிறுமி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
83 பார்வைகள்

ராகம – கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்பொல கோவிலில் இருந்து வல்பொல ரயில் நிலையம் நோக்கி கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, ரயில்வே கடவையின் பாதுகாப்பு கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதையடுத்து, ரயில்வே கடவைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றுமொரு லொறி மீது குறித்த லொறி மோதியுள்ளது.

அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் வீதியோரமாக நடந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோரும் விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

71 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

70 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

80 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

75 0 0