உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

ஒலிபெருக்கி பயன்பாட்டை குறைக்குமாறு பள்ளிவாசல்களுக்கு வேண்டுகோள்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
71 பார்வைகள்

தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறும், பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கும் அறங்காவலர்களுக்கும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவர்கள், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 14, 21, 28 மற்றும் செப்டெம்பர் 04 ஆகிய திகதிகளில்) ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கி, தொழுகையையும் சேர்த்து பிற்பகல் 12:45 மணிக்கு முன்னதாக நிறைவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பரீட்சை நடைபெறும் நேரங்களில் குறிப்பாக, ளுஹர் மற்றும் அஸர் தொழுகை நேரங்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டின் அளவைக் குறைக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

முடிந்தவரை பள்ளிவாசலின் உள்ளக ஒலிபெருக்கிகளை (Internal Speakers) மட்டும் பயன்படுத்தி, மாணவர்கள் சிரமமின்றி பரீட்சை எழுதுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு பள்ளிவாசல்களின் கதீப்மார்களுக்கும் முஅத்தின்மார்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.”

இவ்விடயம் தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலகத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

39 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0