உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
120 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்றைய(12) தினம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கு அவசியமான வசதிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை மற்றும் முக்கிய தேவைகள் தொடர்பில் வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி (D.M.O) வைத்தியர் A.R.A. ரிஷான் அவர்களுடன் விரிவாக கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு 27 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில் உள்ளனர். 13 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது. நோயாளர்களுக்கு தடையின்றி மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இந்த ஊழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் உள்ள இரண்டு மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் நோயாளர்களை மாடிகளுக்கு இடையில் மாற்றும்போது பெரும் சிரமங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த மின் அழுத்தம் இதற்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார இணைப்பை சீரமைத்து மின்தூக்கிகளை விரைவில் இயங்கச் செய்வதற்கான நடைமுறைத் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், 70,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் A தர வைத்தியசாலையாக இருந்தும், முறையான வைத்திய ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டது. இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக மாதிரிகளை டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி, முடிவுகளைப் பெற வேண்டிய நிலை காணப்படுவதால் நோயாளர்களுக்கு ஏற்படும் காலதாமதத்தை கருத்திற்கொண்டு, மஸ்கெலியா வைத்தியசாலையிலேயே தேவையான ஆய்வுக்கூட வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனுடன், வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர் காவுவண்டி அடிக்கடி பழுதடைவதால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை ஏனைய வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, நோயாளர் காவுவண்டியை முறையான நிலையில் பராமரிப்பதுடன், அவசர தேவைகளுக்கான மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

வைத்தியசாலையில் கண்டறியப்பட்ட மேற்கண்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தியுள்ள ஜீவன் தொண்டமான், பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக மாவட்ட செயலாளரை இன்று (13) நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கென்று கர்ப்பிணி தாய்மார்களின் குழந்தை பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திர தேவைப்பாடு தொடர்பாக கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் பேசியதற்காக வைத்திய அதிகாரிகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மஸ்கெலியா மற்றும் அதனைச் சூழவுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தரமானதும் தடையற்றதுமான சுகாதார சேவையை உறுதி செய்வது அவசியம் எனத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், மக்களின் அடிப்படைத் தேவைகளை நேரில் சென்று கண்டறிந்து, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நடைமுறை ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

மக்களின் சுகாதார உரிமையை உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய நலன்களை முன்னிறுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித் வலியுறுத்தல்

பாரம்பரிய அணிசேரா கொள்கையிலிருந்து விடுபட்டு, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான இணக்கப்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும்…

104 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

108 0 0
இலங்கை செய்திகள்

நாடெங்கும் 2027 பட்ஜட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

106 0 0
இலங்கை செய்திகள்

தேர்தலை முடக்கி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதா?

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், கொழும்பு…

117 0 0