உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த கடற்படையினரின் ஆதரவு வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
128 பார்வைகள்

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.

புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல்வளப் பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி முறைகள் கடல் வளங்களை அழிப்பதுடன், உள்ளூர் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும் பாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ஆளுநர் கவனம் செலுத்தினார். இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்பட்டு, சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் கேட்டுக்கொண்டார்.

கடல் வழியாக நாட்டிற்குள் உயிர்கொல்லி போதைப்பொருட்கள் கடத்தப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

வடக்கு கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடற்படை தொடர்ந்தும் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன அவர்கள், வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பு, கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

33 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

25 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படு கொ*லைக்கு சர்வதேச விசாரணையே தீர்வு.!

“தமிழினப் படு கொலைக்கு கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது…

43 0 0