உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

தற்கொலைகளைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
138 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதுடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.08.2026) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.

கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டது. தேசிய மட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 30 பேர் என்ற அளவில் இவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்தப் போக்கு அதிகரித்து வருவதும் கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டது.

மது பாவனைக்கு அடிமையாதல், குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்பாடல் குறைவு, பெற்றோர் – பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான நெருக்கம் குறைவடைதல், தனிமை, சமூக மற்றும் உளவியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்நிலைக்கு செல்வாக்குச் செலுத்தி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாடலில் எடுத்துரைத்தனர். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையின் முயற்சிகள் மட்டும் போதுமானதல்ல் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆபத்தான மனநிலையிலிருந்து மீட்கப்பட்ட நபர்களுக்கான தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆலோசனைச் சேவைகளில் காணப்படும் குறைபாடுகள், பால்நிலை வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கான பல்துறை ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் போதுமானளவில் இடம்பெறாமை உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடலில் அடையாளம் காணப்பட்டன. அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறும், பதிவாகியுள்ள உயிரிழப்புகள் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொண்டு, காரணிகளை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்தத் தடுப்புச் செயற்றிட்டம் சுகாதாரத் துறையின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல், கல்வி, சமூக சேவைகள், நிர்வாகம், பொலிஸ், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய மாகாணளவிலான சமூக இயக்கமாக அமைய வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். அதற்காக கள மட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடைய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பிலேயே தற்போது மிகப்பெரிய இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இணைக்கும் செயற்பாட்டு பொறிமுறையை மீளச் செயற்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடனும் சமூக நலனைக் கருத்திற்கொண்டும் வெளியிடுவதன் அவசியமும் கலந்துரையாடலில் விசேடமாக வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, மனஅழுத்தம், தனிமை, குடும்பப் பிரச்சினைகள் அல்லது ஏனைய வாழ்க்கை நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படும் எவரும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் 24 மணிநேரமும் இயக்கப்படும் ‘நேயம்’ உளவள ஆதரவு சேவையின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு இரகசியமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதும் கலந்துரையாடலில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலக உளவள இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0