உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள சட்ட நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
131 பார்வைகள்


வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0