உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
65 பார்வைகள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (06) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிங்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரடையிஸ் வத்தை பகுதியில், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வாதுவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக பிங்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தாண்டியா பகுதியில், மாரவில பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுனேரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானமும், மதுபானம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 1215 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

56 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

52 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

62 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

86 0 0