உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஹிஜ்றா சந்தி – அல்-மர்ஜான் வீதியை நான்கு வழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
123 பார்வைகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க நேற்று (06) சம்மாந்துறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு கள ஆய்வுகளில் ஈடுபட்டார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் விடுத்த விசேட கோரிக்கைக்கேற்பவே இவ்விஜயம் அமைந்திருந்தது.

இவ்விஜயத்தின் போது, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் நேரில் பார்வையிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதன்போது, பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் நலன் கருதி நடைபாதையை மேலும் விஸ்தரித்தல், மோட்டார் சைக்கிள்களுக்கென தனியான பாதையை அமைத்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாகக் ஆராயப்பட்டது.

அத்துடன், பிரதேசத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ஹிஜ்றா சந்தி சுற்றுவட்டத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கும், ஹிஜ்றா சந்தியிலிருந்து அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி வரையிலான வீதியை நான்கு வழிப்பாதையாக (4-Lane Road) அகலப்படுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் அதிகாரிகளுக்கிடையில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில், கல்முனை அலுவலகத்தின் நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம்.அஸ்மீர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர். ஆஷிக் முஹம்மட், எம்.ஐ.எம்.றிஸ்வி கான், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, ரீ.ஸங்கீதன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

56 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

52 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

62 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

86 0 0