உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
132 பார்வைகள்

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாகச் சிலர் வாதிட்டாலும், அது யதார்த்தமானது அல்ல. அரச அதிகாரிகள் நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு மக்களுக்கு நேரடியாகப் பொறுப்பு கூற வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்பதால், மாகாண சபைகளுக்கு நேரடியான மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் இயங்குவது ஒரு குற்றமாகும். மாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தினால், எதிர்காலத்தில் நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்து நிறுவனங்களையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயக்க முடியும் என்ற ஆபத்தான நிலையை அது உருவாக்கும்.

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அன்றைய தினமாவது அரசு மாகாண சபைத் தேர்தலை எப்போது, எந்த முறையில் நடத்தப் போகின்றது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

65 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

59 0 0