உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

‘ரத்மலானே சைமா’ வௌியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
69 பார்வைகள்

மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொலிஸ் குழுவொன்று மலேசிய பொலிஸாருடன் இணைந்து அண்மையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, தனுஷ்க கௌஷல்ய என்ற ‘ரத்மலானே சைமா’ உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சிபானி இம்ரான் என்ற குற்றவாளியின் அனைத்து நிதி நடவடிக்கைகளையும் இவரே வழிநடத்தியுள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகச் செயற்பட்டுள்ள தோடு, அவரது குரல் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதையும் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டில் கெஹெல்பத்தர பத்மே மலேசியாவில் தலைமறைவாக வாழ்வதற்கு, கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில் இவர் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது பிரான்ஸில் தலைமறைவாக இருக்கும் ‘குடு அஞ்சு’ என்பவரின் நெருங்கிய கூட்டாளியாகச் சில காலம் செயற்பட்ட இவர், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

‘குடு அஞ்சு’ சைமாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், அது குறித்து கஞ்சிபானி இம்ரான் சைமாவிற்கு எச்சரித்ததைத் தொடர்ந்து, அவர் கஞ்சிபானியுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியுள்ளார்.

இவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0