உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாணவர்களுக்கான தலசீமியா மற்றும் சுகாதாரப் பரிசோதனை.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
73 பார்வைகள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தொற்றா நோய் (NCD) பரிசோதனை மற்றும் தலசீமியா (Thalassemia) பரிசோதனை முகாம் இன்றைய தினம் (30) நடத்தப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் தலைமையில் இடம்பெற்ற இப்பரிசோதனை முகாமினூடாக, பிராந்தியத்தில் முதன்முறையாக இத்தகைய விரிவான மருத்துவப் பரிசோதனை திட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பரிசோதனைத் திட்டமானது Caritas EHED நிறுவனத்தின் ‘Mitigation of Thalassemia Project’ என்ற தலசீமியா தடுப்புத் திட்டத்துடன் இணைந்து கூட்டாக முன்னெடுக்கப்பட்டது.

அடிப்படை உடற்பரிசோதனை: ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உயரம், நிறை, உடல் நிறைச் சுட்டி (BMI) மற்றும் உயர் குருதி அமுக்கம் (Blood Pressure) என்பன இதன்போது பரிசோதிக்கப்பட்டன.

இரத்த மாதிரிச் சேகரிப்பு: குருதியில் சீனியின் அளவு (Blood Glucose), கொலஸ்ட்ரால் அளவு (Lipid Profile), சிறுநீரகச் செயற்பாடு தொடர்பான சீரம் கிரியேட்டினின் (Serum Creatinine) மற்றும் தலசீமியா நோயறிதல் (Thalassemia Screening) ஆகிய பரிசோதனைகளுக்காக இரத்த மாதிரிகள் பெறப்பட்டன.

சுகநலக் கல்வி வழிகாட்டல்: சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் J. மதன் அவர்களினால் தலசீமியா நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதன் வீரியம், பரம்பரை ரீதியான தாக்கம் மற்றும் முன்னாயத்த தடுப்பு முறைகள் தொடர்பில் மாணவர்களுக்குத் தெளிவான சுகநலக் கல்வி வழிகாட்டப்பட்டது.

“பாடசாலைப் பருவத்திலேயே இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றா நோய்கள் மற்றும் தலசீமியா போன்ற பரம்பரை நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்த முடியும் என சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

இப் பரிசோதனை முகாமில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச்சுகாதார செவிலிய சகோதரி, சிரேஷ்ட பொதுச்சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர், பொதுச் சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கள மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றிப் பரிசோதனைகளைச் சிறப்பாக முன்னெடுத்திருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0