உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் காலமானார்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
107 பார்வைகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடகத்துறைப் பேராளுமையுமான ஆறுமுகம் சபேஸ்வரன் (வயது 47) நேற்று புதன்கிழமை இரவு கனடாவில் காலமானார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘யாழ். தினக்குரல்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமான சபேஸ்வரன், யுத்த காலத்தில் பல்வேறு கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பல சர்வதேச ஊடகங்களுக்கும் இங்கிருந்து பணியாற்றினார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர், சில வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த நிலையில், கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு காலமானார்.

தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைக் குரலாகவும் அவர்களின் போராட்டங்களில் முன்னின்று உழைத்தவராகவும் திகழ்கின்றார். அவரது உன்னதமான சேவைகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடங்களாக நிலைத்திருக்கும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0