போதைப்பொருட்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது.!
ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.