உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நீதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
69 பார்வைகள்

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, நீதி அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்யுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட அச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (29) பிற்பகல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே, இந்த தகவல் வௌியாகியுள்ளது.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஜீவ் அமரசூரிய, குறித்த கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததாகக் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்து வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, அது தொடர்பான முடிவை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

56 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

63 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0