உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மஸ்கெலியா தெய்வகந்த பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானப்பணி முன்னெடுப்பு

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
61 பார்வைகள்



மஸ்கெலியா சாமிமலை தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்தின் பதில் கடமை அதிபர் திருமதி.மாக்ரட் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் புஸ்பகுமார அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானப்பணி ஒன்று இன்று காலை (29/07/2026) 10.00மணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

தெய்வகந்த பிரஜா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி புவிதாஸ் அவர்களின் வழிநடத்தலில் பிரஜா பொலிஸ் பிரிவின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பாடசாலை சுற்றுச்சூழலை சுத்தம் செய்தனர்.

இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக நாடு முழுவதும் தற்போது அமுலில் இருக்கின்ற டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்திட்டம் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்டது.

இந்த சிறப்பான சமூகப் பணியில் கலந்து கொண்டு சிரமதானப்பணியை செய்து தந்த மஸ்கெலியா பொலிஸ் மற்றும் பிரதேசவாசிகள் பழைய மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிப்பதாக தெய்வகந்த பாடசாலையின் பதில் கடமை அதிபர் திருமதி.மாக்ரட் அவர்கள் தெரிவித்தார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த வாரத்திலேயே நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான இரண்டாவது சிரமதானப்பணி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய வரையறைக்குள் இருக்கின்ற சகல பகுதிகளிலும் இவ்வாறான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் அடுத்து வருகின்ற நாட்களில் திட்டமிட்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிசுகத் புஸ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

56 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

63 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0