உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

திருடப்பட்ட உந்துருளி மீட்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
47 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பகுதியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் உந்துருளி பாணமை பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான உந்துருளி கடந்த 22ஆம் திகதி களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளது.

இதையடுத்து, உந்துருளியின் உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு பகுதிகளுக்கும் தகவல் வழங்கி விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (28) பாணமை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், திருடப்பட்டதாகக் கூறப்படும் உந்துருளியும் சந்தேகநபரும் பாணமை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளில், சந்தேகநபர் உந்துருளியை திருடிய பின்னர் அதன் இலக்கத் தகட்டை மாற்றி, கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸாரிடம் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உந்துருளியின் பெறுமதி சுமார் 8 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட உந்துருளி, போலி இலக்கத் தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும்போது உரிய முறையில் பூட்டிப் பாதுகாப்பாக நிறுத்துமாறும், உந்துருளிகளுக்கு பாதுகாப்புப் பூட்டுகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

56 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

63 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0