உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஆலய அன்னதான நிகழ்வில் வாள்வெட்டுத் தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
76 பார்வைகள்

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை (29) பிற்பகல் அன்னதானம் வழங்கியவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததுடன் ஏனைய சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று பகல் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டபோது, அதனை வாங்கி சாப்பிட்ட இளைஞர் ஒருவர், “உணவு சரியில்லை” என தெரிவிக்க, அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 7 பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அன்னதானம் வழங்கியவர்களைத் தாக்கியதில், பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின், அவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடிக்க, ஏனைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தப்பி ஓடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

56 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

63 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0