உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு அவசியமே இல்லை!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
123 பார்வைகள்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானத்துக்காகச் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்காகச் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை.

அரசமைப்பின் 83ஆவது சரத்தில் எவற்றுக்கு மக்கள் தீர்ப்பு அவசியம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் இந்த ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு மற்றும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்தங்கள் அந்த எந்தவொரு சரத்திலும் உள்ளடங்கவில்லை. கடந்த காலத்தில் 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போதும் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவில்லை.

இந்தத் திருத்தத்தை எவரேனும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தி, அதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே அரசு அத்தகைய நடைமுறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். எனினும், தற்போதைய சட்டச் சூழலின்படி அவ்வாறு தீர்ப்பு வரும் என்று நான் நினைக்கவில்லை.

நீதிமன்றங்களில் வழக்குகள் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் தாமதமாவதால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். நீதித்துறை அமைப்பும் ஏனைய துறைகளைப் போலவே திறமையாகச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

கடந்த 10-15 வருடங்களாக எதிர்காலத் தேவைகளைக் கணித்து நீதியரசர்களின் எண்ணிக்கையை உயர்த்தாததாலேயே இன்று வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த ஓய்வுபெறும் வயது நீடிப்பானது மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் அல்லாமல், நீதித்துறை அமைப்புச் சட்டத்தைத் திருத்தி மாவட்ட நீதிபதிகள், நீதிவான் நீதிபதிகள் உள்ளிட்ட அனைவருக்குமே ஓய்வுபெறும் வயதை 2 ஆண்டுகள் நீடிக்கின்றோம்.

1978ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஓய்வுபெறும் வயது திருத்தப்படவில்லை. பெரும்பான்மையான சர்வதேச நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளதால், அனுபவம் வாய்ந்த நீதிபதிகளின் சேவையை மேலும் சில ஆண்டுகள் பயன்படுத்திக்கொள்வதே இதன் நோக்கமாகும்.

நீதித்துறைச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதுடன், இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்குகள் தாமதமாகும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

59 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0