உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நீதித்துறையின் ஜனநாயக முறையைச் சீர்குலைக்கும் சர்வாதிகாரப் போக்கை உடனே கைவிடுங்கள் – சஜித் பகிரங்க எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
51 பார்வைகள்


முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறிய திசைகாட்டி அரசு, தற்சமயம் ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெற்றிடமாகியிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசும் ஜனாதிபதியும் தவறியுள்ளனர். தற்சமயம் நாட்டில் இருக்கும் கனம் நீதிபதிகள் இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமற்றவர்களா அல்லது தகுதியற்றவர்களா என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இருக்கும் அதேவேளையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவதற்கான அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர அரசு தீர்மானித்து, அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அனுமதியைப் பெற்றுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசு ஏன் செல்கின்றது? ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காகவே அரசுக்கு மக்கள் ஆசி கிடைத்த போதிலும், அதற்குப் பதிலாக அரசு ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தையும் தனிக்கட்சி நாட்டை ஆளும் கொள்கையையும் பின்பற்றி வருகின்றது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் முதலமைச்சர் வேட்பாளர் பதவியைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, இலஞ்சம் வழங்கி, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டதாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி வருகின்றார்.

ஜே.வி.பியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதன் தலைமைச் சபை அங்கத்தவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க மற்றும் சாலிய பீரிஸ் போன்ற அனுபவமிக்க ஜனாதிபதி சட்டத்தரணிகள் கூட அரசின் இந்த யோசனையை எதிர்க்கின்றனர். இதனையும் நாங்களா செய்தோம்? ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனையின் காரணமாகவா இவர்களும் இவ்வாறு பிரஸ்தாபித்துள்ளனர்? இனியாவது இவ்வாறான பொய்களாலும் ஏமாற்றங்களாலும் நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்.

அரசு பொய்களையே கூறி வருகின்றது என்பது வெளிப்படையாகிவிட்ட நிலையில், இப்போதாவது ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அரசு ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை ஜனநாயக முறையிலேயே தோற்கடிப்பதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சகல பணிகளையும் முன்னெடுப்போம். ஏகாதிபத்திய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு, “அழகான நாடு – வளமான வாழ்க்கை” எனும் கொள்கை அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0